வானத்தில் பலூனில் மிதந்தபடியே 16 இளம் ஜோடிகள் திருமணம்


வானத்தில் பலூனில் மிதந்தபடியே 16 இளம் ஜோடிகள் திருமணம்
x
தினத்தந்தி 14 March 2017 9:28 AM GMT (Updated: 2017-03-14T14:58:33+05:30)

தெற்கு சீனாவில் வானத்தில் பலூனில் மிதந்தபடியே 16 இளம் ஜோடிகள் திருமணம் செய்திருக்கும் செயல் வியப்படைய செய்துள்ளது.


சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இதனை முன்னிட்டு  16 இளம் ஜோடிகள் வானத்தையும், பூமியையும் சாட்சியாக வைத்து கொண்டு பறக்கும் பலூனில் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் ஜோடி கூறுகையில், பலூனில் மிதந்தபடி வண்ணமயமான பூக்களை பார்க்கும் போது மிகவும் அழகாக உள்ளது என கூறியுள்ளனர்.

பின்னர் இளம் ஜோடிகள் தங்களுக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வடக்கு சீனாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், தெற்கு சீனாவில் இதமான சீதோஷ நிலை நிலவி வருவது குறிப்பித்தக்கது.Next Story