மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஏற்றிச்செல்லும் ராக்கெட் என்ஜின்களின் சோதனை


மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஏற்றிச்செல்லும் ராக்கெட் என்ஜின்களின் சோதனை
x
தினத்தந்தி 14 March 2017 10:02 AM GMT (Updated: 2017-03-14T15:32:27+05:30)

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் அதிநவீன ராக்கெட் என்ஜின்களின் சோதனை தற்போது அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.


சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்தியாவின் மங்கள்யானும் இந்த தேடலில்தான் தீவிரமாக இறங்கியுள்ளது.

இது ஒருபுறமிருக்க, அங்கு மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுமார் 40 பேரை கொண்ட ஒரு காலனியை அங்கு நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் அதிநவீன ராக்கெட் என்ஜின்களின் சோதனை தற்போது அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

மிசிசிபி நகரில் உள்ள ஸ்டென்னிஸ்  விண்வெளி ஆய்வு மையத்தில் ஓரியன்  ராக்கெட்டின் என்ஜின்கள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஓரியன் ராக்கெட் தான் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஏற்றிச்செல்ல தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ராக்கெட்டிற்கு தேவையான RS-25 வகையை சேர்ந்த அதிநவீன 4 என்ஜின்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சாதாரண ராக்கெட்டுகளை விட இந்த ஓரியன் ராக்கெட்டின் வேகம் சுமார் 5,00,000 பவுண்ட் சீற்றத்திற்கு சமமானது.

என்ஜின்கள் சோதனை சுமார் 6 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் வரை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின்போது என்ஜின்களில் இருந்து வெளியான புகை மூட்டத்தை விஞ்ஞானிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த முயற்சியின் மூலம் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஏற்றிச்செல்லும் முயற்சி ஒரு நாள் நனவாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.Next Story