ஹெட்போன் வெடித்தத்தால் முகம் கருகிய இளம் பெண்


ஹெட்போன் வெடித்தத்தால் முகம் கருகிய இளம் பெண்
x
தினத்தந்தி 15 March 2017 9:59 AM GMT (Updated: 2017-03-15T15:29:25+05:30)

ஆஸ்ரேலியா சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவரின் ஹெட்போன் வெடித்ததில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டது.

சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது பயங்கர சத்தத்துடன் ஹெட்போன் வெடித்துள்ளது, இதில் அந்த பெண்ணின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பின்னர் விமானம் தரையிரங்கியதும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

ஹெட்போன் வெடிப்பது முதல்முறையல்ல என்றும், தீ விபத்தால் பல பயணிகளுக்கு மூச்சுத்திணறலும் இருமலும் ஏற்பட்டதாகவும் அவுஸ்திரேலியா போக்குவரத்து பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளது. விமான பயணத்தின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தகூடாது என எச்சரிக்கை செய்யப்படும், ஆனால் அதை பல பயணிகள் மீறுகிறார்கள்.

Next Story