உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 15 March 2017 8:30 PM GMT (Updated: 15 March 2017 6:58 PM GMT)

அமெரிக்காவில் 13 கோடிப்பேரின் சுகாதார காப்பீடுகளை கவனிக்கிற அமைப்பின் தலைமை பதவியை இந்திய அமெரிக்கரான சீமா வர்மா நேற்று ஏற்றுக்கொண்டார்.

* அமெரிக்கா வர்த்தகப்போர் தொடுத்தால் அதனால் ஏற்படக்கூடிய சுமைகளை அமெரிக்க நிறுவனங்கள்தான் முதலில் தாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சீன பிரதமர் லீ கெகியாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* தென்கொரியாவில் ஊழல் வழக்கில் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை பதவி பறிப்பையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே மாதம் 9–ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

* அமெரிக்காவில் 13 கோடிப்பேரின் சுகாதார காப்பீடுகளை கவனிக்கிற அமைப்பின் தலைமை பதவியை இந்திய அமெரிக்கரான சீமா வர்மா நேற்று ஏற்றுக்கொண்டார். டிரம்ப் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவர் பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* வடகொரியாவின் தொடர் அணுகுண்டு, ஏவுகணை பரிசோதனைகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க ராணுவ தலைவரும், தென்கொரிய ராணுவ தலைவரும் தொலைபேசி வழியாக விவாதித்தனர். இருவரும் 30 நிமிடம் பேசிக்கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

* நேபாளத்தில் பிரதமர் பிரசந்தா தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மாதேசி முன்னணி விலக்கிக்கொண்டு விட்டது.

* சிரியாவில் இத்லிப் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ரஷிய போர் விமானம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story