பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பெண் உறுப்பினர்களின் பங்கு பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவு


பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பெண் உறுப்பினர்களின் பங்கு பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவு
x
தினத்தந்தி 16 March 2017 11:43 AM GMT (Updated: 2017-03-16T17:13:18+05:30)

பெண் எம்.பிக்கள் உள்ள நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியாவிற்கு 148 வது ரேங்க் கிடைத்து உள்ளது.


பெண் எம்.பிக்கள் உள்ள நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியாவிற்கு 148 வது ரேங்க் கிடைத்து உள்ளது. ஐக்கிய நாடுகளின்  பெண்கள் தலைவர் புன்சைல் லாம்போ நகுக பெண்களுக்கு பாராளுமன்றத்தில் அதிக இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார்.

 ஐநாவின்  193 நாடுகளில் உள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் பாராளுமன்ற ஒன்றியத்தின் மூலம் வெளியிடபட்டது  இந்தியாவில் உள்ள 542 பாராளுமன்ற உறுப்பினர்களில்  64 பெண் உறுப்பினர்களே ஆவர். இது 11.8 சதவீதம் ஆகும். அதுபோல்  மாநிலங்களவையில் உள்ல மொத்தம் 245 உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்கலின் பங்கு 27 மட்டுமே இது 11 சதவீதம் ஆகும்.

கேபினட்டில் பெண் அமைச்சர்கள் இடம் பெற்ற  நாடுகள் பட்டியலில் இந்தியா 88 வது ரேங்கில் உள்ளது.ஐந்து சதவீதம் அல்லது 18.5 சதவீதம் மட்டுமே ஆகும்.

எனினும், பெண்கள் முக்கியமான பதவிகளை பிடித்து உள்ளனர்  சுமித்ரா மகாஜன் (சபாநாயகர்)மற்றும் சுஷ்மா சுவராஜ் வெளிவிவகார அமைச்சர் உள்ளார்.

நிருபர்களிடம் பேசிய இண்டர் பாராளுமன்ற ஒன்றியத்தின் பொதுசெயலாளர் மார்ட்டின் சவுன்கோங்  பாலின சமத்துவம் அடைய பெண்களுக்கு  இட ஒதுகீடு வழங்கும் வழிமுறைகளை வேகபடுத்த வேண்டும்.தற்போதைய விகிதத்தில்  சட்டமியற்றும் சபைகளில் ஆண்கலுக்கு நிகராக 50 சதவீதம் வ்ழங்க வேண்டும். என கூறி உள்ளார்.

உலக அளவில் பாராளுமன்றங்களில் பெண்கள் சதவீதம்  2015 இல் 22.6 சதவீதமாக இருந்தது. 2016 இல் அது 23.3 சதவீதம் என அகுறைவாகவே கூடி உள்லது. இந்தியாவில்  உலக அளவில் கணக்கிடும் போது பாதியாகவே உள்ளது.

பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ள ரேங் பட்டியலில் ருவாண்டோ 61.3 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தொடர்ந்து பொலிவியா 53.1 சதவீதமும், கியூபா 48.5 சதவீதமும் பெண்கள் உள்ளனர்.

தெற்கு ஆசியாவில் நேபாளம் 29.6 சதவீதம் பெற்று 48வது இடத்திலும்,  பாகிஸ்தான் 20.6 சதவீதம் பெற்று 89 வது இடத்திலும் , ( ஆனால் இதில் பெண் அமைச்சர்கள் யாரும் இல்லை)  வங்காளதேசம் 23.3 சதவீதம் பெற்று 91 வது இடத்தில் உள்ளது. இலங்கை 5.8 சதவீத பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் 179 வது இடத்தில் உள்ளது.

பல்கேரியா, பிரான்ஸ், நிகரகோவா ஆகிய நாடுகள் 52.9 சதவீத பெண் அமைச்சர்களை கொண்டு முதல் இடத்தில் உள்ளது.

Next Story