பிரான்ஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் காயம்; ஐ.எம்.எப். அலுவலகத்தில் குண்டு வெடிப்பு


பிரான்ஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு 2 மாணவர்கள் காயம்; ஐ.எம்.எப். அலுவலகத்தில் குண்டு வெடிப்பு
x
தினத்தந்தி 16 March 2017 1:43 PM GMT (Updated: 2017-03-16T19:12:46+05:30)

பிரான்சில் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு மாணவர்கள் காயம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக ஒரு மாணவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.

பாரீஸ், 

தெற்கு பிரான்ஸில் உள்ல கிராஸே நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது. துப்பாக்கி சூட்டில் இரு மாணவர்கள் காயம் அடைந்து உள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டது மாணவர்களே என உள்ளூர் அதிகாரிகள் கூறிஉள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 17 வயது மாணவனை போலீசார் கைது செய்து உள்ளனர். இதற்கிடையே மற்றொருவன் தப்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது, மாணவர்கள் என்று தெரிந்ததும் உள்ளூர் போலீசார் காரணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இதில் பயங்கரவாத தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சர்வதேச நாணய நிதியகத்தின் பாரீஸ் அலுவலகத்தை காலை பணியாளர் திறந்தபோது குண்டு வெடித்து உள்ளது. இதில் ஒருவர் காயம் அடைந்து உள்ளார். குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Next Story