பிரான்ஸ்ஸில் பள்ளியில் மர்மநபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு 8 பேர் காயம்


பிரான்ஸ்ஸில் பள்ளியில் மர்மநபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு 8 பேர் காயம்
x
தினத்தந்தி 16 March 2017 3:09 PM GMT (Updated: 2017-03-16T20:40:27+05:30)

பிரான்ஸில் பள்ளி ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஸ்

தெற்கு பிரான்ஸில் கிராஸே நகரில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சிக்கி உள்ளதாகவும் முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் இருந்து 2 கைதுப்பாக்கிகளையும், இரண்டு கையெறி குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலைமை ஆசிரியர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலின் பின்ணனியில் பயங்கரவாதிகள் சதி இருக்கலாம் என அந்நாட்டு போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story