உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 16 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-17T00:53:09+05:30)

ஆஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இயான் சேப்பலும், கிரேக் சேப்பலும் கடிதம் எழுதி உள்ளனர்.

* இங்கிலாந்து நாட்டில் 2014–ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும், 2015–ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் தேர்தல் செலவின விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில், கன்சர்வேடிவ் கட்சிக்கு 70 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.56 லட்சம்) அபராதம் விதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

*  அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் பட்ஜெட்டில் 31 சதவீதத்தை வெட்டி விட டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

*  பிலிப்பைன்ஸ் பாராளுமன்றத்தில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டேவுக்கு எதிராக பதவிபறிப்பு புகாரை எதிர்க்கட்சி எம்.பி., கேரி அலஜானோ தாக்கல் செய்துள்ளார். அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

*  அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டிரம்பின் பொருளாதார ஆலோசகராக உள்ள டினா பவல் நியமிக்கப்பட உள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

*  கொலம்பியா நாட்டின் துணை அதிபர் ஜெர்மன் வர்காஸ் பதவி விலகி உள்ளார். இவர் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் களமிறங்கக்கூடும் என கூறப்படுகிறது. புதிய துணை அதிபராக தேசிய போலீஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் ஆஸ்கர் நரஞ்சோவை அதிபர் ஜூவான் மனுவேல் சாண்டோஸ் நியமித்துள்ளார்.

*  ஆஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரிய நிலக்கரி சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் இயான் சேப்பலும், கிரேக் சேப்பலும் கடிதம் எழுதி உள்ளனர். இந்த நிலக்கரி சுரங்க திட்டம், இந்திய ஆஸ்திரேலிய இரு தரப்பு உறவையும், விளையாட்டு தொடர்புகளையும் பாதித்து விடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Next Story