சிறப்பு வாய்ந்த சமூக சேவை செய்ததற்காக 11 இந்திய பெண்களுக்கு சிங்கப்பூரில் விருது


சிறப்பு வாய்ந்த சமூக சேவை செய்ததற்காக 11 இந்திய பெண்களுக்கு சிங்கப்பூரில் விருது
x
தினத்தந்தி 18 March 2017 8:30 PM GMT (Updated: 2017-03-19T01:02:25+05:30)

சிங்கப்பூரில், இந்திய பெண்கள் 11 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருப்பது முன்னேறத்துடிக்கிற பெண்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், குழந்தைகள் நலன் உள்ளிட்ட பல்துறைகளில் சமூக சேவையாற்றிய 25 ஆசிய பெண்களுக்கு 2 அமைப்புகளின் சார்பில் பாராட்டி ‘உமென் ஐகான் விருது’ வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது பெற்றவர்களில் 11 பேர் இந்திய பெண்கள் ஆவார்கள்.

விருது பெற்றவர்களில் ஒருவரான வந்தனா சர்மா என்ற பெண் பல்லாண்டு காலம் இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி விட்டு, தொழில் துறையில் களம் இறங்கி சாதனை படைத்திருக்கிறார். கார்கில் போரிலும் இவர் எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டு இருக்கிறார்.

இன்னொரு பெண்ணான ரேவதி சித்தார்த்த ராய், பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுவிட்டு, தனது கணவர் இறந்து விட்ட நிலையில் மும்பையில் வாடகைக்கார் ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார். தற்போது இவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் உழைத்து வருகிறார்.

டாக்டர் ஸ்ரீமதி கேசன், சென்னையில் உள்ள தனது நிறுவனத்தின் மூலம் குழந்தைகளை விண்வெளி மற்றும் வானியல் துறைகளில் ஊக்கப்படுத்தி வருகிறார்.

இப்படி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த இந்திய பெண்கள் 11 பேர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருப்பது முன்னேறத்துடிக்கிற பெண்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

Next Story