லஞ்சப்பணத்தில் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்கிய சீனா அதிகாரிக்கு சிறை


லஞ்சப்பணத்தில் ஆஸ்திரேலியாவில் வீடு வாங்கிய சீனா அதிகாரிக்கு சிறை
x
தினத்தந்தி 19 March 2017 9:50 AM GMT (Updated: 2017-03-19T15:19:48+05:30)

லஞ்சம் பெற்ற பணத்தில் ஆஸ்திரேலியாவில் இரண்டு வீடுகள் வாங்கிய குற்றச்சாட்டில் சீன காவல்துறை அதிகாரி ஆயுள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

ஷாங்காய்

லஞ்சம் பெற்ற பணத்தில் ஆஸ்திரேலியாவில் இரண்டு வீடுகள் வாங்கிய குற்றச்சாட்டில் சீன காவல்துறை அதிகாரி ஆயுள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். அவர் 17 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டியிருக்கும். வாங் எனும் பெயர் கொண்ட மூத்த காவல்துறை அதிகாரி சுமார் 6.8 மில்லியன் யுவான் வரை இலஞ்சம் பெற்று பல்வேறு கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தார் என்றும் அதே பணத்தை தனது இரு மகள்களுக்கும் ஆஸ்திரேலியாவில் வீடுகள் வாங்கி பரிசளித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. வாங்கிற்கு 59 வயதாகிறது; அவர் சீனாவின் வட கிழக்கு பகுதியை சார்ந்தவராவார்.

ஆஸ்திரேலியா தனது அந்நிய முதலீட்டு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் வாங்கிற்கு தண்டனை கிடைத்துள்ளது.

இவ்வாறு அந்நிய முதலீட்டாளர்கள் சொத்து வாங்கும் விதிமுறைகளில் இடைவெளிகளை பயன்படுத்தி வீடுகளை வங்குவது அங்கு வீட்டு விலைகளை கடுமையாக உயர்த்தி அரசியல் ரீதியான பிரச்சினையாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சீனப் பணக்காரர்கள் தங்கள் பணத்தைக் கொண்டு வீடுகளை வாங்குவதைத் தடுக்க பண மோசடி சட்டங்களில் விதிகளை கடுமையாக்க கருதி வருகின்றனர்.

Next Story