பாகிஸ்தானில் இந்து திருமண மசோதா சட்டம் ஆனது


பாகிஸ்தானில் இந்து திருமண மசோதா சட்டம் ஆனது
x
தினத்தந்தி 20 March 2017 5:32 AM GMT (Updated: 2017-03-20T11:01:38+05:30)

பாகிஸ்தானில் இந்து திருமண மசோதாவுக்கு ஜனாதிபதி மம்கைன் உசேன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். அங்கு அவர்களுக்கு என திருமணத்தை முறைப்படுத்த தனியாக சட்டம் இல்லை.எனவே முறைப்படி இந்து திருமண சட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நவாஸ் செரீப் தலைமையிலான அரசு பாராளுமன்றத்தில் இந்து திருமண சட்ட மசோதா கொண்டு வந்து தாக்கல் செய்தது.

இந்த மசோதா பாராளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. அதை தொடர்ந்து மசோதா ஜனாதிபதி மம்கைன் உசேன் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து நேற்று கையெழுத்திட்டார்.அதை தொடர்ந்து இந்து திருமண மசோதா சட்டம் ஆனது.

இதன்மூலம் பாகிஸ்தானில் இந்துக்கள் திருமணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. திருமணத்தின் போது இந்துக்கள் தங்கள் மதச்சடங்குகளை முறைப்படி செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது.மேலும் இந்துக்களின் திருமணங்கள் பதிவு செய்யப்படும். அதற்காக அரசே ரிஜிஸ்திரர்களை நியமிக்கும். இந்துக்களின் திருமணம், மணமுறிவு, மறுமணம் மற்றும் குடும்ப அமைப்பு உள்ளிட்டவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story