3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை!


3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை!
x
தினத்தந்தி 21 March 2017 11:02 AM GMT (Updated: 2017-03-21T18:01:23+05:30)

ஆஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் மனைவிக்கு முன் 3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர வைத்துள்ளது.

பெர்த்

ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரை சேர்ந்தவர் ஹெர்பர்ட் பகல் முழுவதும் மது அருந்திய , அதன் பின் கஞ்சா அடித்துள்ளார். பின்னர், நள்ளிரவு மனைவியை கொன்றுவிடுவேன் என மிரட்டிய ஹெர்பர்ட் 3 வயது குழந்தை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். இதனையடுத்து, 7 வயது குழந்தையின் உடலிலும் பெட்ரோல் ஊற்றியுள்ளார்.

உடனே அண்டை வீட்டுக்காரரனா டேனியல் மேக்மில்லன் என்பவர் ஹெர்பர்ட் வீட்டில் நுழைந்து உதவியுள்ளார்.

அப்போது, குழந்தை அழகாக இருந்ததால் கொளுத்தியதாக டேனியலிடம் கூறிய ஹெர்பர்ட், அது என் குழந்தை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என டேனியலையும் மிரட்டியுள்ளார்.

இதில் குழந்தையின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் பயங்கர தீ காயம் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெர்பர்ட், சம்பவத்தின் போது போதையில் தான் பைத்தியம் போல் இருந்ததால், இது குற்றம் இல்லை என நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்நிலையில், நீதிபதி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story