பேஸ்புக் நேரலையில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம


பேஸ்புக் நேரலையில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம
x
தினத்தந்தி 22 March 2017 10:40 AM GMT (Updated: 2017-03-22T16:19:28+05:30)

அமெரிக்காவில் இளம் பெண்ணை பேஸ்புக் நேரலையில் ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசிக்கும் 15 வயது சிறுமியை பேஸ்புக் நேரலையில் ஆறு பேர் சேர்ந்து கற்பழிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது.

நேரலை வீடியோவை 40 பேர் பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் ஒருவர் கூட இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

பின்னர் தன் மகளை காணவில்லை என வீடியோவில் இருந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு அவர் தாயிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடந்து வரும் வேளையில், இதில் சம்மந்தப்பட்ட 6 பேரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் இருந்த சிறுமியின் வீடியோவை பேஸ்புக் நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது.

Next Story