நடுவானில் பறந்த விமானத்தில் கொடிய பாம்பு பயணிகள் அதிர்ச்சி


நடுவானில் பறந்த விமானத்தில் கொடிய பாம்பு பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 22 March 2017 12:29 PM GMT (Updated: 2017-03-22T17:59:01+05:30)

அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் உயிருள்ள பாம்பு இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை நோக்கி  விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென விமானி, விமானத்தில் ஒரு பாம்பு உள்ளது. ஆனால் அது எங்கு உள்ளது என தெரியவில்லை என அறிவித்தார்.

 அப்போது விமானத்தில் இருந்த ஒரு சிறுவனின் இருக்கைக்கு கீழே பாம்பு இருந்ததை பார்த்த சிறுவன் இது குறித்து ஊழியர்களிடம் கூறியுள்ளான்.

பின்னர் 5 அடி நீளமுள்ள அந்த பாம்பை விமான ஊழியர்கள் பத்திரமாக பிடித்து ஒரு பைக்குள் அடைத்தனர்.

பின்னர் அருகிலிருந்த ஒரு பெட்டியில் பாம்பு மூடி வைக்கப்பட்டது. அதன்பின்னர் எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானம் அலாஸ்காவுக்கு வந்து சேர்ந்தது.

இதற்கு முன்னர் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணியிடம் இருந்து அந்த பாம்பு தப்பித்து விமானத்தில் புகுந்து கொண்டது பின்னர் தெரியவந்தது. அந்த பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Next Story