லண்டன் - நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம் உலகின் அதிவேக விமானம் தயாரிப்பு


லண்டன் - நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம் உலகின் அதிவேக விமானம் தயாரிப்பு
x
தினத்தந்தி 26 March 2017 5:59 AM GMT (Updated: 2017-03-26T11:29:04+05:30)

லண்டனில் இருந்து நியூயார்க்குக்கு 3 மணி நேரத்தில் பயணம் செய்யும் வகையில் அதிவேக விமானம் தயாரிக்கப்படுகிறது.

லண்டன், 

அதிவேகமாக மின்னல் வேகத்தில் பயணம் செய்யக் கூடிய சூப்பர் சோனிக் பயணிகள் விமானம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 

அந்த விமானத்தை அமெரிக்காவின் விர்ஜின் தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தயாரிக்கிறார். அதற்காக இதுவரை ரூ.21 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்கு ‘பேபி பூம்‘ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது விமானத்தில் என்ஜினீயரிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. இது மணிக்கு 2,335 கி.மீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லக் கூடியது. இது மற்ற அதிவேக விமானங்களை விட 10 சதவீதம் கூடுதல் வேகத்தில் பறக்கும் திறன்கொண்டது.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் விமானத்தை தயாரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. ஜப்பானின் டோக்கியோவில் இருந்து சான் பிரான்ஸிகோவிற்கு 5 மணி நேரங்களில் பயணம் செய்ய முடியும்.  இந்த விமானம் 60 ஆயிரம் அடி உயரம் பறக்க கூடியது. இதில் லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3 மணி 15 நிமிடத்தில் பயணம் செய்ய முடியும். அதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோதனைகள் முடிந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை தாயாரித்து முடிக்க 160 மில்லியன் பவுண்டிற்கு மேல் செலவாகும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story