மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் டைம்ஸ் பட்டியலில் பிரதமர் மோடி


மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் டைம்ஸ் பட்டியலில் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 March 2017 11:56 AM GMT (Updated: 2017-03-27T17:26:27+05:30)

மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பிரபல டைம்ஸ் பத்திரிகையின் பட்டியலில் பிரதமர் மோடி பெயரும் இடம்பெற்று உள்ளது


வாஷிங்டன்

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகையான டைம்ஸ் ஆண்டுதோறும் உலக அளவில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் உலக அளவில் நூறு தலைவர்களின் பெயர்கள் இடம்பெறும். அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கான தலைவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அந்த பட்டியலில் உலக தலைவர்களின் பெயர்கள் இடம் பெறச்செய்து அது இணையதளத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்படும். இணையதள வாக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது வெளியிடப்பட உள்ள பட்டியலில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, சீன அதிபர் ஜீ ஜின்பிங், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
கடந்த 2015ம் ஆண்டிலும் டைம்ஸ் வெளியிட்ட பட்டியலில் இந்திய பிரதமர் மோடி இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story