4 நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார் ராணுவ தளபதி பிபின் ராவத்


4 நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார் ராணுவ தளபதி பிபின் ராவத்
x
தினத்தந்தி 28 March 2017 12:19 PM GMT (Updated: 2017-03-28T17:48:49+05:30)

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் 4 நாள் அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ளார்.

காத்மண்டு,

நேபாள அரசின் அழைப்பை ஏற்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் 4 நாள் பயணமாக நேபாள தலைநகர் காத்மண்டு சென்றடைந்தார். அவரை அந்நாட்டு ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபா வரவேற்றார்.  பிபின் ராவத்திற்கு இன்று இரவு அந்நாட்டு இராணுவத் தலைமை தளபதி ராஜேந்திர சேத்ரி  இல்லத்தில் விருந்து வைக்கிறார். நாளை அந்நாட்டு பிரதமர் பிரசாந்தா வை பிபின் ராவத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார். அதனை தொடர்ந்து காத்மண்டுவில் உள்ள இந்திய இராணுவம் ஓய்வூதிய முகாமிற்கு சென்று அங்கு இருக்கும் கூர்காகளை சந்தித்து உரையாடுகிறார். மாலையில் முக்திநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறார். ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இருநாட்டு தரப்பு பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story