நீங்கள் ஆபாசப் படம் பார்ப்பது, கூகுள் இணையதளத்திற்கு தெரியும் ஆய்வில் தகவல்


நீங்கள் ஆபாசப் படம் பார்ப்பது, கூகுள் இணையதளத்திற்கு தெரியும் ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 30 March 2017 9:09 AM GMT (Updated: 2017-03-30T14:39:19+05:30)

நீங்கள் ஆபாசப் படம் பார்ப்பது, கூகுள் இணையதளத்திற்கு தெரியும் என்று, ஆய்வில் தெரியவந்துள்ளது.

யாருக்கும் தெரியாமல் நீங்கள் ஆபாசப் படம் பார்த்தாலும், கூகுளுக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை என்று இந்த ஆய்வை நடத்திய சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

அதில், உலக அளவில் ஆபாசப் படங்கள் பார்ப்பதற்காக, இன்காக்னிடோ எனப்படும் மறைமுக தேடுதளத்தையே பலரும் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இன்காக்னிடோ இணையதளத்தில் நாம் என்ன பார்க்கிறோம் என்ற விவரம் எதுவும் கணினியில் சேமிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், கூகுளில் இந்த விவரம் எப்போதும் சேமித்து வைக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாதாரணமாக, கூகுள் இணையதளம் பயன்படுத்தும்போது, அதன் மேல்பக்கம் வலது ஓரமாக, சிரிப்பதைப் போன்ற ஒரு சின்ன முகம் உங்களை பார்ப்பதைப் போல அவ்வப்போது தோன்றும். இதுவே இன்காக்னிடோ எனப்படும் தனிப்பட்ட தேடுதளத்தைப் பயன்படுத்தினால், அதில் உங்களை பார்த்து கண் சிமிட்டுவதைப் போல, புருவம் நெரிப்பதைப் போல பல முகங்கள் தோன்றும்.

இவை அனைத்துமே கூகுள் உங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதன் அர்த்தமாகும். இது தெரியாமல், நாம் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருப்போம். 100க்கும் மேலான இணையதள பக்கங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும், கூகுள் சர்வர் அதனை எளிதாகக் கண்டுபிடித்துவிடும் என்றும், லேப் டாப், மொபைல், கணினி என எதில் ஆபாசப்படங்கள் பார்த்தாலும் இதே விதிமுறையை கூகுள் பின்பற்றுகிறது என்றும் அந்த ஆய்வை நடத்திய, தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Next Story