அமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி


அமெரிக்காவில் சாலை விபத்தில் 13 பேர் பலி
x
தினத்தந்தி 30 March 2017 3:02 PM GMT (Updated: 2017-03-30T20:32:07+05:30)

அமெரிக்காவில் பஸ்ஸும் டிரக்கும் மோதியதில் 13 பேர் பலியானார்கள்.

நியூயார்க்,

அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச்க்கு சொந்தமான பஸ் மீது டிரக் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். பலியானவர்கள் அனைவரும் வயதானவர்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அபோட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story