உலக செய்திகள்

பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை + "||" + 20 killed by shrine custodian in Sargodha police

பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை

பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை
பாகிஸ்தானில் தர்கா நிர்வாகியால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 20 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சார்கோதாவின் முகமது அலி குஜ்ஜார் தர்காவில் நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்து உள்ளது. தர்காவின் நிர்வாகி 20 பேர் கொன்று உள்ளார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் உயிர் தப்பிய 4 பேர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து தர்கா அமைந்து உள்ள பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தர்கா நிர்வாகி அப்துல் வாஹீத் அந்நாட்டு அரசு பணியாளர் என்பது தெரியவந்து உள்ளது. 

அப்துல் வாஹீத் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே தர்காவை நிர்வாகம் செய்வதில் பிரச்சனையும் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

அப்துல் வாஹீத் தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார். பின்னர் அவர்களை கொலை செய்து உள்ளார் என தெரியவந்து உள்ளது.