சவுதி அரேபியா மக்களுக்கு வருமான வரி ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு


சவுதி அரேபியா மக்களுக்கு  வருமான வரி ரத்து: அரசு அதிரடி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2017 8:30 AM GMT (Updated: 2017-04-10T13:59:46+05:30)

சவுதி அரேபியா மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டின் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த 2014ல் கடுமையான மாற்றம் வந்தது. கடும் சரிவை சந்தித்த அந்த தருணத்தில் சவுதியின் பொருளாதார சூழலில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இதனால் புதிய வரி விதிப்பில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பல விதமான புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இன்று சவுதி அரேபியாவின் நிதி துறை அமைச்சர் அல் ஜதான் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கும், சவுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கும் வரி கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.

Next Story