ஆஸாத்தைக் கைவிடும்படி ரஷ்யாவை வற்புறுத்த ஜி-7 நாடுகள் முனைப்பு


ஆஸாத்தைக் கைவிடும்படி ரஷ்யாவை வற்புறுத்த ஜி-7 நாடுகள் முனைப்பு
x
தினத்தந்தி 10 April 2017 6:24 PM GMT (Updated: 2017-04-10T23:54:19+05:30)

குரூப் ஆஃப் செவன் எனும் பணக்கார நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

லூக்கா (இத்தாலி)

குரூப் ஆஃப் செவன் எனும் பணக்கார நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் முக்கிய விஷயங்களாக சிரியாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலும், வட கொரியா, ரஷ்யா, லிபியா, ஈரான் ஆகிய நாடுகளின் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலாளர் போரிஸ் ஜான்சன் ரஷ்யா தொடர்ந்து ஆஸாத்தின் ஆட்சியை ஆதரித்துக் கொண்டிருப்பது அதன் நம்பகத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கிறது. இப்படியே அது நடந்து கொண்டிருந்தால் அதன் மீதான தடைகளை மேலும் அதிகரிக்கவே செய்ய வேண்டியிருக்கும் என்றார். இதை கனடாவும் ஆதரிக்கிறது.

தவிர அமெரிக்க வெளியுறவுச் செயலர் டில்லர்சன் மாநாடு முடிந்தவுடன் ரஷ்யா செல்லவுள்ளார். அப்போது ரஷ்யாவை எப்படி தங்கள் சார்பான யோசனைகளுக்கு சாதகமாக சம்மதிக்கச் செய்வார் என்பது தெரியவில்லை. சிரிய அதிபர் இராசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினார் என்பதை ரஷ்யா ஏற்கவில்லை. கடந்த ஆறு வருடங்களாக சிரியாவின் உள்நாட்டுப்போர் அந்நாட்டை சீரழித்து விட்டது. இதனிடையே ரஷ்ய அதிப செய்தித்தொடர்பாளர் கூறுகையில் ஆஸாத் பதவி விலக வேண்டும் என்னும் மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருப்பதால் எவ்விதமான பலாபலன்களும் கிடைக்காது. டில்லர்சனும் அமெரிக்காவின் முக்கிய நோக்கம் ஐஎஸ் ஐஎஸ் சை வீழ்த்துவதே என்றார். இந்த அறிவிப்பு அமெரிக்காவின் தோழமை நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்த ஒன்றா இல்லை இது போன்ற தாக்குதல்கள் தொடருமா என்று அவை தெளிவில்லாமல் இருக்கின்றன.

இம்மாநாட்டை நடத்தும் இத்தாலி ஆஸாத்தை எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகளான துருக்கி, சவூதி அரேபியா, அரபு ஐக்கிய எமிரேட்டுகள், ஜோர்டான் மற்றும் கத்தார் ஆகியவற்றை சிரியாவின் மீதான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் போது பங்கெடுக்க அழைத்துள்ளது. சிரியா தவிர வட கொரியாவின் அணு ஆயுத முனைப்புகளும் கூட விவாதிக்கப்படுகிறது. மேலும் லிபியாவில் மேலை நாடுகள் ஆதரவு பெற்ற அரசு தள்ளாடிக் கொண்டிருப்பதால், அமெரிக்காவும், ரஷ்யாவும் எகிப்துடன் இணைந்து மாற்று அரசு அமைக்கும் முயற்சியை எடுக்கலாம். இதை இத்தாலி கவலையுடன் நோக்கி வருகிறது. மாநாட்டில் ஈரான், உக்ரைன் மற்றும் உலக பயங்கரவாதம் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.


Next Story