அல்ட்ராசவுண்ட் புகைப்படத்தில் அம்மா வயிற்றில் இருக்கும் இரட்டையர் சிறுமிகள் முத்தம் பகிர்ந்து கொள்ளும் காட்சி


அல்ட்ராசவுண்ட் புகைப்படத்தில்  அம்மா வயிற்றில் இருக்கும் இரட்டையர் சிறுமிகள் முத்தம் பகிர்ந்து கொள்ளும் காட்சி
x
தினத்தந்தி 11 April 2017 5:40 AM GMT (Updated: 2017-04-11T11:33:54+05:30)

அல்ட்ராசவுண்ட் புகைப்படத்தில் அம்மா வயிற்றில் இருக்கும் இரட்டையர் சிறுமிகள் முத்தம் பகிர்ந்து கொள்ளும் காட்சி இடம்பெற்று ஆச்சரியத்தை கொடுத்து உள்ளது.


அமெரிக்க்காவை சேர்ந்த காதல் ஜோடி கரிஸாஜில் -ராண்டி.  கரிஸா ஜில் 25 வாரம் கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கபோவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த் நிலையில் காதல் ஜோடி இருவரும்  கரு எவ்வாறு ஒருப்பேற்று உள்ளது என்பதை கண்டறிய கடந்த வாரம், பென்சில்வேனியாவில் உள்ள  கரு இமேஜிங் சென்டருக்கு சென்றனர்.

அங்கு கரிஸாஜில்லுக்கு ஸ்கேனிங் எடுக்கபட்டது அல்ட்ரா சவுண்ட் போட்டோவையும் அவர்களுக்கு அந்த சென்டர் வழங்கியது. அந்த படத்தை பார்த்த காதல் ஜோடி இருவருக்கும் அதிர்ச்சியும் ஆனந்தமும் ஏற்பட்டது. அவர்களுக்கு கரிஸா கர்ப்பத்தில் இரட்டை பெண் குழந்திகள் உள்லனர். இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கி முத்தம் கொடுக்க போவது போல் அந்த படம் அமைந்து இருந்தது.

இது குறித்து கிரிஸா கூறும் போது கர்ப்பம் என்பது ஒரு அழகான விஷயம். இது போன்ற காட்சியை பார்க்க கிடைப்பது என்பது  மிகவும் அரிது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.என கூறினார்.

கரிஸா-ராண்டி காதல் ஜோடியினர் தங்கள் இரட்டை பெண் குழந்தைகலுக்கு கர்ப்பஹ்தில் இருக்கும் போதே பெயரும் வைத்து விட்டனர் இசபெல்லா-  ஹல்லி

இசபெல்லா  தனது சகோதரி ஹல்லியில் கன்னத்தில் முத்தம் கொடுத்து உள்ளார் என அல்ட்ரா சவுண்ட் போட்டோவில் எழுதி வைத்து உள்ளார்.

Next Story