நெற்றியில் கண் உடைய வேற்று கிரகவாசிகளால் கடத்தபட்ட மாணவர்


நெற்றியில் கண் உடைய வேற்று கிரகவாசிகளால் கடத்தபட்ட மாணவர்
x
தினத்தந்தி 11 April 2017 11:03 AM GMT (Updated: 2017-04-11T16:33:08+05:30)

வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.

ஏலியன்கள் எனப்படும், வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி மனிதனிடம் காலகாலமாக தொடர்ந்து நிலவி வருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆர்வம் குறையவில்லை அதுகுறித்து தேடுதல்களில் தொடர்ந்து ஈடுபட்டுதான் வருகிறோம்.ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது

பிரேசிலைச் சேர்ந்த புருனோ போர்கஸ் எனப்படும் ஒருவர் வேற்றுக்கிரகவாசி ஒருவருடன் இருப்பதைப் போன்று ஓவியம் ஒன்றை வரைந்து விட்டு கடந்த மார்ச் 27 அன்று காணாமல் போயுள்ளார்.

இதில் விசித்திரமான விஷயம் என்ன வென்றால் அவர் காணாமல் போவதற்கு முன்னர் 14 புத்தகங்களை எழுதிவைத்துள்ளார். சுமார் ஒரு மாத காலம் தனி அறையில் இருந்த அவர் இரகசிய குறியீட்டு மொழி மூலம் இந்த 14 புத்தகங்களை எழுதியுள்ளார்.

அது மட்டுமன்றி அவரது அறை முழுவதும் ஓரிடம் கூட விடாமல் சுவர்களிலும் தரையிலும் இரகசிய குறியீட்டில் பல விடயங்களை எழுதி வைத்துள்ளார்.

இவை அனைத்தும் வரைபடங்களையும் ஏதோ ஓர் மர்மமான மொழியினையும் கொண்டுள்ளது. அவர் வரைந்துள்ள வரைபடங்கள் குறித்து தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு கொண்டு வருகின்றது.

மேலும் இவர் இருந்த பூட்டப்பட்ட அறைக்குள், கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என்பதையும், அண்டம் முடிவில்லாமல் தொடர்வது எனவும் கூறிய இத்தாலிய மெய்யியலாளர் கியோர்டானோ புரூனோ வின் சிலை ஒன்றும் காணப்பட்டுள்ளது.

இவர் 1500களில் வாழ்ந்த ஒருவர் இந்தச் சிலை எப்படி வந்தது என்பதற்கும் விடை இல்லை. காணாமல் போனவரின் குடும்பத்தார் இது குறித்து கூறுகையில்.,

ஒரு மாதத்திற்கு முன்னர் அச்சிலை அங்கு இருக்கவில்லை, வெளியில் இருந்து கொண்டு வந்ததையும் தாம் அவதானிக்க வில்லை என்கின்றனர். இது மேலும் மர்மமாக காணப்படுகின்றது.

இதேவேளை இவர் வேற்றுக் கிரகவாசிகளுடன் தொடர்பு கொண்ட நபராக இருக்கலாம் எனவும் இவர் மூலமாக அவர்கள் உலகிற்கு ஏதோ செய்தியினை கூறியுள்ளார்கள் எனவும் ஒரு சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் வரைந்துள்ள ஓவியம் ஒன்று பிரமிப்பின் உச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ள வேற்றுக் கிரகவாசி நெற்றியில் கண் ஒன்றினை உடையவராக வரையப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இவர் வேற்றுக் கிரகவாசிகளால் கடத்தப்பட்டாரா? அவரின் குறியீடு எதனை வெளிப்படுத்துகின்றது என்பது தொடர்பில் ஆய்வுகளும் விசாரணைகளும் தொடர்ந்து கொண்டு வருகின்றது.


Next Story