அமெரிக்காவில் ஒருவருக்கே பிறந்த 1,300 குழந்தைகள் டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலம்


அமெரிக்காவில் ஒருவருக்கே பிறந்த  1,300 குழந்தைகள் டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலம்
x
தினத்தந்தி 12 April 2017 5:35 AM GMT (Updated: 2017-04-12T11:04:50+05:30)

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற ஒருவருக்கு முறைகேடாக 1,300 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் டி.என்.ஏ சோதனையில் நிரூபணமாகியுள்ளது.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில் பகுதியில் நடந்த இந்த சம்பவம் விவரம் வருமாறு:-

அமெரிக்காவை சேந்ர்த  தனியார் துப்பறியும்  விசாரணை அதிகாரியை  கடந்த 2001 ஆம் ஆண்டு குறித்த தனியார் விசாரணை அதிகாரியை தொடர்பு கொண்ட இரு இளைஞர்கள், தங்களது உண்மையான தந்தையை கண்டுபிடித்து தர தனித்தனியாக முறையிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகின. குறித்த விசாரணையில் அந்த இரு இளைஞர்களின் உண்மையான தந்தை ஒரே நபர் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து 15 ஆண்டுகளாக மேற்கொண்ட விசாரணையின் முடிவில் நாஷ்வில் பகுதியில் குடியிருக்கும் ஓய்வுபெற்ற அஞ்சலர் தான் இந்த 1,300 குழந்தைகளுக்கும் உண்மையான தந்தை என்பதை டி.என்.ஏ சோதனை மூலம் அவர் தெரிந்து கொண்டார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பலரும் தங்களுக்கு உண்மை தெரியும் என்றும், வெளியே சொல்லிக்கொள்ள அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 1,300 குழந்தைகளுக்கு தந்தையானது குறித்து விளக்கமளித்த அந்த அஞ்சலர், அந்த காலத்தில் கருத்தடை என்பது பிரபலமாகவில்லை என்றும், தற்போது இந்த விவகாரத்தில் தாம் வெட்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

1960களில் தாம் பிரபல நடிகர் போன்று இருந்துள்ளதாகவும், பெண்களை கவரும் வசீகரம் தமக்கு இருந்ததாகவும் விசாரணை அதிகாரியுடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த 1,300 குழந்தைகளில் எவரும் குறித்த முதியவர் மீது வழக்கு தொடுக்கவோ அவரை களங்கப்படுத்தவோ முன்வரவில்லை எனவும் அந்த தனியார் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Next Story