அருணாசல மக்கள் இந்தியாவின் சட்டவிரோத ஆட்சியின் கீழ் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் சீனா குற்றசாட்டு


அருணாசல மக்கள் இந்தியாவின் சட்டவிரோத ஆட்சியின் கீழ் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் சீனா குற்றசாட்டு
x
தினத்தந்தி 12 April 2017 9:32 AM GMT (Updated: 2017-04-12T15:41:00+05:30)

அருணாச்சல பிரதேச மக்கள் இந்தியாவின் "சட்டவிரோத" ஆட்சியின் கீழ் "கடினமான வாழ்க்கையை" வாழ்ந்து வருகிறார்கள் என சீனா குற்றம்சாட்டி உள்ளது.

பீஜிங்

அருணாச்சல பிரதேச மக்கள்  இந்தியாவின் "சட்டவிரோத" ஆட்சியின் கீழ் "கடினமான வாழ்க்கையை" வாழ்ந்து வருகிறார்கள் மற்றும் அவர்கள் மீண்டும் சீனா திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம் என சீனா பத்திரிகை ஒன்று கூறி உள்ளது.

அருணாசலபிரதேசம் தெற்கு திபெத். எனவே அது தங்களுக்கு  தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி  வருகிறது.ஆனால் அருணாசல பிரதேசத்தின் அக்சாய் சின் பகுதியை 1962-ம் ஆண்டு நடந்த போரின் போது சீனா ஆக்கிரமித்து கொண்டதாக இந்தியா கூறுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா வருகிற 4 முதல் அருணாசலபிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார்.

அதற்கு சீனா கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்துக்குள் செல்ல தலாய்லாமாவுக்கு அனுமதி அளிக்கக்  கூடாது என இந்தியாவை கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி  சீனா கேட்டுக் கொண்டது. மேலும் எச்சரிக்கையும் விடுத்தது.

ஆனால் சீனாவின் எதிர்ப்பை இந்தியா நிராகரித்தது.தனது எதிர்ப்புக்கு மத்தியிலும் தலாய்லாமாவை அருணாசலபிரதேசத்தில் அனுமதித்திருப்பது சீனாவை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

இது குறித்து சீனா தினசரி பத்திரிகையில் ஆத்திரமூட்டும்கட்டுரை ஒன்று வெளியிடபட்டு உள்ளது.இந்தியாவின் சட்டவிரோத ஆட்சியின் கீழ் தெர்கு தெபெத்தில் வசிப்பவர்கள் கடினமான் வாழ்க்கை வாந்து வருகிறார்கள்.அவர்கள் அங்கு பல்வேறு வகைஅயான பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.அவர்கள் விரைவில் சீனா திரும்புவார்கள் என எதிர்க்கிறோம்.

தலாய்லாமா அருணாச்சல் சென்றது, அவரைஅவரே ஏமாற்றி கொள்வதற்கு சமம்.  மக்கள், நாடு, அந்த பிராந்தியத்தை ஏமாற்றுவதற்கும் ஆதாரம் ஆகும்.

தான் வசிப்பதற்கு இந்தியாவை சார்ந்திருக்கும் தலாய்லாமா, தனது எஜமானரை திருப்திபடுத்த செய்யும் முயற்சிகள் என இது தெளிவாக உள்ளது.  இதற்காக தெற்கு திபெத்திய பகுதியை விற்க முடிவு செய்திருப்பது அதிகமாகும்.

சமீப காலமாக அவர் பொதுக்கூட்டங்களில் தான் இந்தியாவின் மகன் என 20க்கும் மேற்பட்ட முறை ஒப்பு கொண்டுள்ளார். இதற்கு வலுவூட்ட, அவர் தெற்கு திபெத்திய பகுதியை இந்தியாவிற்கு விற்க முடிவு செய்துள்ளார்.

ஆனால், இந்தியா - சீனா இடையிலான உறவு, எல்லைப்பிரச்னை, அமைதிக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி அவர் கவலைப்படவில்லை. இந்த பிராந்திய அமைதிக்கு தலாய் லாமா துரோகம் செய்துவிட்டார். எல்லை பிரச்னையை தீர்க்க இந்தியா மற்றும் சீன மக்கள் இடையே நம்பிக்கை மற்றும் விருப்பம் நிலவ வேண்டும். ஆனால், தலாய்லாமாவின் பயணம் இதில் எந்த பயனையும் தராது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story