மலாலாவுக்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியது


மலாலாவுக்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியது
x
தினத்தந்தி 12 April 2017 7:37 PM GMT (Updated: 2017-04-13T01:06:37+05:30)

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானியரான மலாலா யூசஃப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியுள்ளது.

ஒட்டாவா

அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற பாகிஸ்தானியரான மலாலா யூசஃப்சாய்க்கு கௌரவ குடிமகள் தகுதியை கனடா வழங்கியுள்ளது.

தகுதியை பெற்றுக்கொண்ட அவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியேற்றக் கொள்கையை பெரிதும் பாராட்டினார். ட்ரூடோவின் லிபரல் கட்சி அரசு சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளை கனடாவில் குடியேற அனுமதிக்கிறது. கடந்த ஆண்டு கனடா 25,000 அகதிகளை ஏற்றுக்கொண்டது. அருகாமை நாடான அமெரிக்கவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏழு இஸ்லாமிய நாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு எதிரான கொள்கைகளை வெளியிட்ட போது ட்ரூடோ கனடா தொடர்ந்து அகதிகளை வரவேற்கும் என டிவிட்டரில் தெரிவித்தார்.

கனடா நாடாளுமன்றத்தில் மலாலா பேசும்போது, “உங்களது வரவேற்பு பொன்மொழி, நிலைப்பாடு - கனடாவிற்கு நல்வரவு- எனும் வாசகம் ஒரு தலைப்புச் செய்தியையோ அல்லது ஒரு டிவிட்டர் ஹேஷ்டேக்கையோ விட உயர்ந்தது. நீங்கள் தொடர்ந்து உங்களது இதயங்களையும், இல்லங்களையும் உலகின் மிகவும் பாதுகாப்பற்ற குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் திறந்து வையுங்கள் என வேண்டுகிறேன்” என்றார். 

மலாலா 2012 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். கனடாவின் கௌரவ குடிமக்கள் தகுதியைப் பெறும் ஆறாவது நபராவார் மலாலா. இதற்கு முன்னர் அத்தகைய தகுதியை பெற்றவர்களில் நெல்சன் மண்டேலாவும், தலாய் லாமாவும் அடங்குவார்கள்.


Next Story