சிரியா மீதான ஐநா தீர்மானத்தை ரஷ்யா நிராகரித்தது

சிரியா மீதான ஐநா தீர்மானத்தை ரஷ்யா நிராகரித்தது
x
தினத்தந்தி 12 April 2017 8:15 PM GMT (Updated: 12 April 2017 8:15 PM GMT)

சிரியாவில் நடைபெற்ற இராசயானத் தாக்குதலைப் பற்றி விசாரிக்க ஐ நா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரஷ்யா நிராகரித்தது.

ஐக்கிய நாடுகள் சபை (நியூயார்க்) 

சிரியாவில் நடைபெற்ற இராசயானத் தாக்குதலைப் பற்றி விசாரிக்க ஐ நா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம் ரஷ்யா நிராகரித்தது.

இத்தீர்மானம் சிரிய அரசை இராசாயனத் தாக்குதல் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி கோருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலை அதிபர் பஷார் அல் ஆஸாத்தின் இராணவம் செய்திருக்கக்கூடும் என்று மேலை நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால் சிரிய அரசு விசாரணைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவை கருதுகின்றன. ஆனால் ரஷ்யா தனது கூட்டாளியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

வளைகுடாவில் சிரியா-ஈராக் பிரதேசத்தில் போர் துவங்கியதிலிருந்து இதுவரை எட்டு முறை சிரியாவிற்கு எதிராக ஐநா தீர்மானங்களை கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ரஷ்யா தனது கூட்டாளிக்கு ஆதரவாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story