100 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ரோலர் கோஸ்டர் அந்தரத்தில் ஊசலாடிய 24 உயிர்


100 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ரோலர் கோஸ்டர் அந்தரத்தில் ஊசலாடிய 24 உயிர்
x
தினத்தந்தி 15 April 2017 6:23 AM GMT (Updated: 15 April 2017 6:22 AM GMT)

அமெரிக்காவில் 100 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் பழுதாகி நின்றதால் அதிலிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே லார்கோவில் உள்ள தீம் பார்க் ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. தீம் பார்க்கில் உள்ள ரோலர் கோஸ்டரில் சிலர் உற்சாகமாக பயணம் செய்துள்ளனர்.

24 பேருடன் சென்ற 6 பயணிகள் பெட்டிகள் சுமார் 100 அடி உயரத்தில் சென்றபோது, திடீரென ரோலர் கோஸ்டர் பழுதாகி நின்றுள்ளது.

இதையடுத்து தீம் பார்க் ஊழியர்கள் பலமுறை முயற்சித்தும், ரோலர் கோஸ்டரை மீண்டும் இயக்க முடியாததால், அதிலிருந்தவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர், கிட்டதட்ட நான்கு மணிநேரம் போராடி ராட்சத ஏணியை பயன்படுத்தி, ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 24 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.



Next Story