லஞ்சம் வாங்கிய வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


லஞ்சம் வாங்கிய வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 17 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-18T01:50:28+05:30)

தென் கொரியாவின் அதிபராக பதவி வகித்து வந்த பார்க் கியுன் ஹை, தனது தோழி சோய் சூன்–சில் மூலம் அரசு அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சியோல்,

இதையடுத்து அவர் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் பார்க் கியுன் ஹை அரசு அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடைய அதிபர் பதவி பறிக்கப்பட்டது.

இந்த நிலையில் பார்க் கியுன் ஹை மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த சியோல் நகர அரசு வக்கீல்கள் நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் அவர் தனது தோழிக்காக அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தியது, லஞ்சம் வாங்கியது, அரசு ரகசியங்களை கசியவிட்டது, தோழிக்காக அச்சுறுத்தல் விடுத்து 6.8 மில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.430 கோடி) பறித்தது போன்றவற்றில் பார்க் கியுன் ஹை ஈடுபட்டார் என்று கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக அரசு வக்கீல்கள் கூறுகையில், பல மாதங்களாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளோம் என்றனர்.


Next Story