அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகள் எடுத்தால் முழுமையான போர் ஏற்படும் வடகொரியா எச்சரிக்கை


அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகள் எடுத்தால் முழுமையான போர் ஏற்படும் வடகொரியா எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 April 2017 4:59 AM GMT (Updated: 2017-04-18T10:28:29+05:30)

அமெரிக்கா கண்மூடித்தனமான ராணுவ நடவடிக்கைகள் எடுத்தால் முழுமையான போர் ஏற்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா எந்தவிதமான ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனைகளையும் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து ஐ.நா தடைகள் விதித்தாலும், அந்த தடைகளை வடகொரியா தொடர்ந்து மீறிவருகிறது.

ஆறாவது அணுஆயுத ஏவுகணைச் சோதனையை வடகொரியா மேற்கொள்ளலாம் என்று சர்வதேச அளவில் பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த 16 ஆம் தேதி அன்று வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை, ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் வாரந்தோறும் பல ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வோம் என்று வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் ஹான் சாங்-ரையோல், பியாங்யாங்கில் பி.பி.சி செய்தியாளர் ஜான் சுட்வொர்த்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா கண்மூடித்தனமாக ராணுவ நடவடிக்கைகளை எடுத்தால் முழுமையான போர் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளதால், தென்கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.

Next Story