இந்தியா மற்றும் கனடா பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடந்தது


இந்தியா மற்றும் கனடா பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடந்தது
x
தினத்தந்தி 18 April 2017 10:57 AM GMT (Updated: 2017-04-18T16:26:31+05:30)

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றிய விரிவான பேச்சுவார்த்தை இன்று நடந்தது.

புதுடெல்லி,

கனடா நாட்டின் தேசிய பாதுகாப்பு மந்திரியாக இருப்பவர் ஹர்ஜித் சிங் சஜ்ஜன்.  இந்தியாவை சேர்ந்த சீக்கியரான இவர் கடந்த 2015ம் ஆண்டு கனடா பிரதம மந்திரி ஜஸ்டின் டிரடியூ தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்பு மந்திரியாக பதவியேற்று கொண்டார்.

அதன்பின் முதன்முறையாக இந்தியாவுக்கு அவர் 7 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.  அதன்படி அவர் நேற்று புதுடெல்லி வந்து சேர்ந்துள்ளார்.  இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜெட்லி மற்றும் ஹர்ஜித் சிங் ஆகியோர் புதுடெல்லியில் இன்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை பற்றி விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இரு நாடுகளின் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றியும் பேசப்பட்டது.

ஹர்ஜித் சிங் சண்டிகார் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.

Next Story