3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம்: புதிய தகவலால் மீண்டும் தேட வாய்ப்பு


3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம்: புதிய தகவலால் மீண்டும் தேட வாய்ப்பு
x
தினத்தந்தி 21 April 2017 1:46 PM GMT (Updated: 21 April 2017 1:45 PM GMT)

3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் விழுந்த இடம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது


கோலாலம்பூர், 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் 8–ந் தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 புறப்பட்டு சென்றது. ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. இதையடுத்து அந்த விமானம் மாயமானதாக கருதப்பட்டு, தேடல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. 

வருட கணக்கில் இந்த விமானத்தை தேடும் பணி தொடர்ந்த போதும், விமானம் விழுந்த இடம் தெரியவில்லை. இந்த விமானம் எங்கு விழுந்தது பெரும் மர்மமாகவே பார்க்கப்படுகிறது.  இதையடுத்து கடலுக்கு அடியில் அந்த விமானத்தை தேடும் பணியை நிறுத்தி விடுவதாக ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் கடந்த ஜனவரி மாதம் கூட்டாக அறிவித்தன.

இந்த நிலையில் தேடல் வேட்டை நடத்தப்பட்ட இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் இல்லாமல், வட பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என தோன்றுவதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த விமானத்தின் பாகங்களை மீண்டும் கடலுக்கு அடியில் தேடும் பணி நடைபெறலாம் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story