உலகைச் சுற்றி செய்திகள்


உலகைச் சுற்றி செய்திகள்
x
தினத்தந்தி 21 April 2017 10:00 PM GMT (Updated: 2017-04-21T22:51:45+05:30)

* இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று தனது 91&வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். அவரது பிறந்தநாள் விழா அதிகாரப்பூர்வமான முறையில் ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது.

* தாய்லாந்து நாட்டில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு 6 சிறிய பாட்டில்களில் மனித விந்துவை ஒருவர் சட்ட விரோதமாக கடத்தி செல்ல முயற்சித்தார். அவர் தாய்லாந்து நாட்டின் நாங்காய் நகரில் கைது செய்யப்பட்டார்.

* அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு, முதன் முதலாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட லீ என்பவர் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 11.56 மணிக்கு விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டார்.

* பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மத்திய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார். அவர் பிரான்ஸ் நாட்டு பிரஜை என்று பெல்ஜியம் உள்துறை மந்திரி ஜான் ஜம்பான் தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

* சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டு பிரதிநிதியாக அதிபர் ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Next Story