அமெரிக்காவில் தலைமை சர்ஜனாக பணிபுரியும் இந்திய வம்சாவளி மருத்துவர் நீக்கம்


அமெரிக்காவில் தலைமை சர்ஜனாக பணிபுரியும் இந்திய வம்சாவளி மருத்துவர் நீக்கம்
x
தினத்தந்தி 22 April 2017 11:15 AM GMT (Updated: 22 April 2017 11:14 AM GMT)

அமெரிக்காவில் தலைமை சர்ஜனாக பணிபுரியும் இந்திய வம்சாவளி மருத்துவரை டிரம்ப் அந்த பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

அமெரிக்க அரசின் சுகாதார துறையில் தலைமை சர்ஜன் மருத்துவராக பணியாற்றுபவர் விவேக் மூர்த்தி (39) இவரின் பூர்வீகம் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஆகும்.

விவேக் கடந்த ஒபாமா ஆட்சியில் 2014ல் அமெரிக்காவின் 19-வது சர்ஜன் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்த பதவியை ஏற்ற முதல் இந்திய வம்சாளி நபர் விவேக் ஆவார்.

இந்நிலையில், விவேக்கை அந்த பதவியிலிருந்து நீக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்காவின் தலைமை சர்ஜனாகவும் சுகாதாரத்துறையின் தலைவராகவும் இருந்துவரும் விவேக் மூர்த்தி அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே தலைமை அரசு வழக்கறிஞராக இருந்த பிரீத் பஹாரா என்னும் இந்தியரை டிரம்ப் அரசு பதிவி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story