உலகைச்சுற்றி


உலகைச்சுற்றி
x
தினத்தந்தி 23 April 2017 7:40 PM GMT (Updated: 2017-04-24T01:09:41+05:30)

* அமெரிக்காவில் கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல் கல்லூரி முதல்வராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் சக்ரவர்த்தி (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார்.

* அமெரிக்காவில் கன்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல் கல்லூரி முதல்வராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் சக்ரவர்த்தி (வயது 57) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், இந்தியாவில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டமும், முதுநிலை பட்டமும் பெற்றவர்.

* பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்றுலா தீவான பாஹோல் தீவில் சுற்றுலா பயணிகளை கடத்த முயற்சித்து தோற்றுப்போன நிலையில், அங்கு பதுங்கியிருந்த அபு சய்யாப் இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

* சிரியாவில் தென் பகுதியில் குனித்ரா பாகாணத்தில் அமைந்துள்ள அரசுக்கு ஆதரவான தேசிய பாதுகாப்பு படை தளத்தில் இஸ்ரேல் நேற்று வான்தாக்குதல் நடத்தி, 3 படைவீரர்களை கொன்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* இத்தாலியில் பிறந்த 73 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் குக்கி கால்மேன், கென்யாவின் வட பகுதியில் அமைந்துள்ள அவரது சுற்றுச்சூழல் பூங்காவில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு நான்யுகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் குறித்து தகவல் இல்லை.

* பாரீஸ் நகரின் வடக்கு ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Next Story