சிலி கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு


சிலி கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு
x
தினத்தந்தி 24 April 2017 11:06 PM GMT (Updated: 24 April 2017 11:05 PM GMT)

சிலி நாட்டின் கடற்கரை பிரதேசத்தில் 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாண்டியாகோ

சிலி நாட்டுத் தலைநகரான சாண்டியாகோவிலிருந்து 97 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள வால்பராசியோ எனும் இடத்திற்கு அருகாமையில் கடற்பரப்பில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் சுனாமி எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற சொன்னாலும் பின்னர் எச்சரிக்கையை திரும்பப் பெற்றனர். பொதுவாக 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இருந்தாலும் கடல் பரப்பில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதால் பேரளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதலாவதாக வந்த செய்திகள் நில நடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததாக கூறின. ரிக்டர் அளவும் 6.7 என்று குறிப்பிடப்பட்டது. பின்னர் 7.1 ரிக்டர் அளவு என்று திருத்தப்பட்டது.


Next Story