கடுமையான நோய்த்தொற்றிலிருந்து பாடகர் எல்டன் ஜான் மீண்டு வருகிறார்


கடுமையான நோய்த்தொற்றிலிருந்து பாடகர் எல்டன் ஜான் மீண்டு வருகிறார்
x
தினத்தந்தி 25 April 2017 12:19 AM GMT (Updated: 2017-04-25T05:48:31+05:30)

பிரபல மேற்கத்திய பாடகர் எல்டன் ஜான் கடுமையான நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருவதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

லண்டன்

எழுபது வயதாகும் எல்டன் ஜான் சமீபத்தில் தென் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்திருந்தார். அப்போது அவருக்கு கடுமையான நோய்த் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. லண்டன் திரும்பிய பிறகு அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிக்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கான அவரது இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இங்கிலாந்தில் மீண்டும் இசை நிகழ்ச்சிகளை அவர் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தனது இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்த எல்டன் ஜான், “ மருத்துவர்கள் என்னை நன்கு கவனித்துக் கொண்டனர்; அவர்களுக்கு எனது நன்றி” என்று கூறினார்.


Next Story