பாகிஸ்தானில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் வாகனம் சிக்கியது, 10 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் வாகனம் சிக்கியது, 10 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 April 2017 10:23 AM GMT (Updated: 2017-04-25T15:52:17+05:30)

பாகிஸ்தானில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் சிக்கியது.

இஸ்லாமாபாத்,

குர்ராம் ஏஜென்ஸியின் கோதார் பகுதியில் வாகனம் சென்ற போது கண்ணிவெடிகுண்டு வெடித்து உள்ளது. இதில் அவ்வழியாக சென்ற வாகனம் வெடித்து சிதறியது. அதில் இருந்த பெண்கள், சிறார்கள் என 10 பேர் பலியாகினர் என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. காயம் அடைந்த 8 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு உதவிசெய்ய அங்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பட்டு உள்ளது எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் விஸ்தரிக்க அதிகாரிகளுக்கு நவாஸ் செரீப் உத்தரவிட்டு உள்ளார். 

இந்த தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு கூறவில்லை, இருப்பினும் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.

Next Story