பாகிஸ்தான் தூதர் அகமது சவுத்ரி டொனால்ட் டிரம்ப்புடன் சந்திப்பு


பாகிஸ்தான் தூதர் அகமது சவுத்ரி டொனால்ட் டிரம்ப்புடன் சந்திப்பு
x
தினத்தந்தி 25 April 2017 10:29 AM GMT (Updated: 2017-04-25T15:58:18+05:30)

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார்.

நியூயார்க்,

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு டிரம்பை சந்தித்து பேசினார். இஸ்லாமாபாத்திற்கு வாஷிங்டன்னிற்கு  இடையேயான உள்ள உறவு உறுதியாக உள்ளதாக அவர் கூறினார். மேலும் பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் டிரம்ப் கூறியதாக டான் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அய்ஜாஸ் அகமது சவுத்ரி கடந்த டிசம்பர் 2013-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன், அவர் அமெரிக்க வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story