15 மாத தடைக்கு பின் விளையாடிய ஷரபோவா வெற்றி


15  மாத தடைக்கு பின் விளையாடிய ஷரபோவா வெற்றி
x
தினத்தந்தி 26 April 2017 8:04 PM GMT (Updated: 2017-04-27T01:33:27+05:30)

அனுமதியற்ற மருந்தை உட்கொண்டதற்காக விளையாட தடை விதிக்கப்பட்ட முன்னாள் உலக சாம்பியனான மரியா ஷரபோவா தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

ஸ்டட்கர்ட் (ஜெர்மனி) 

முதலில் உட்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த மெல்டோனியம் எனும் மருந்தை ஷரபோவா தடை விதிக்கப்பட்டப் பின்னரும் உட்கொண்டதால் 2016 ஆஸ்திரேலியன் ஓப்பன் போட்டிகளுக்கு முன்னர் விளையாடுவதிலிருந்து 15 மாதங்களுக்கு தடை விதிக்கப்பெற்றார். இத்தனை மாதங்கள் கழித்து தற்போது நடைபெற்று வரும் ஸ்டர்ட்கர்ட் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்ட அவர் தனது முதல் போட்டியில் இத்தாலியின் ராபர்டோ வின்சியை நேரடி செட்களில் தோற்கடித்தார்.

ஷரபோவா முதலில் தடுமாறினாலும் 3-6, 7-5 மற்றும் 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்றில் தனது சக நாட்டவரான மகரோவாவை எதிர்த்து விளையாடவுள்ளார் மரியா. முப்பது வயதாகும் ரஷ்யரான ஷரபோவா ஸ்டர்ட்கர்ட் கோப்பையை முன்னர் மூன்று முறை வென்றுள்ளார். தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு இம்முறை தரவரிசைப்பட்டியலில் இடமளிக்கப்படவில்லை.

விதிகளுக்கு புறம்பாக மருந்தை உட்கொண்ட விவகாரத்தில் முதலில் இரண்டாண்டுகளுக்கு விளையாட விதிக்கப்பட்டத் தடை பின்னர் 15 மாதங்களாக குறைக்கப்பட்டது.


Next Story