அமெரிக்கா மீது 2001 தாக்குதலை விட 100 மடங்கு சக்திவாய்ந்த தாக்குதல் அல்-கொய்தா தலைவர் எச்சரிகை


அமெரிக்கா மீது 2001 தாக்குதலை விட 100 மடங்கு சக்திவாய்ந்த தாக்குதல் அல்-கொய்தா தலைவர் எச்சரிகை
x
தினத்தந்தி 27 April 2017 5:10 AM GMT (Updated: 2017-04-27T10:39:07+05:30)

அமெரிக்கா மீது கடந்த செப்டம்பர் 2001ல் நடந்த 9/11 தாக்குதலை விட பயங்கரமான தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என அல்கொய்தா தீவிரவாத இயக்கம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள ராணுவ தலைமையகம், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந்தேதி பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தன.

நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் உள்ளது.  110 அடுக்கு மாடிகளை கொண்ட அந்த இரட்டைக் கோபுரங்கள் மீது அல்-கொய்தா பய்ங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதில் 3000 பேர் பலியாகினர். 6000 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த பயங்கரவாத தாக்குதலால் ஒட்டு மொத்த அமெரிக்காவும் நிலை குலைந்து போனது.

இந்நிலையில், அல்-கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் ஜவகரி தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், அமெரிக்கா இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யும் ஆக்கிரமிப்புகளை பொருத்து கொள்ள முடியாது.

நான் அமெரிக்கர்களுக்கு சொல்ல விரும்பவது இதை தான்.

பாலஸ்தீனம், ஈராக், மாலி, சோமாலியா, எகிப்து போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய குற்றத்துக்கு தான் 9/11 தாக்குதலை நடத்தினோம்.

அமெரிக்கா இதை தொடரும் பட்சத்தில் 9/11 தாக்குதலை விட 100 சக்தி வாய்ந்த தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என அய்மன் அல் எச்சரித்துள்ளார்.

அல்-கொய்தாவின் இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story