அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்க எஸ்.எம்.எஸ் அனுப்பும் தொழில்நுட்பம் சோதனை


அணு ஆயுத தாக்குதல்களில் இருந்து தப்பிக்க எஸ்.எம்.எஸ் அனுப்பும் தொழில்நுட்பம் சோதனை
x
தினத்தந்தி 27 April 2017 11:43 AM GMT (Updated: 2017-04-27T17:12:56+05:30)

அணு ஆயுதம் வீசப்பட்ட கடைசி நொடியில் உங்களுக்கு வரும் மெசேஜ் என்ன தெரியுமா?

அமெரிக்கா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு பனிபோர் வலுத்து வருகிறது.

இந்த விஷயத்தில் இந்த நாடுகள் மட்டுமின்றி, பல நாடுகளும் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன.

நாம் வாழும் ஒரு பகுதியில் அணு ஆயுத தாக்குதல் நடந்தால், நாம் உயிர் பிழைத்துக் கொள்ள நமக்கு கிடைக்கும் ஒரு கடைசி வாய்ப்பு எதுவாக இருக்கும், உங்களுக்கு தெரியுமா...

நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு என்பது ஒரு தேசிய அமைப்பு சார்ந்த எச்சரிக்கை ஒலியாகும், குறிப்பாக இது ஒரு அணு ஆயுத தாக்குதலுக்கு முன்பு எழுப்பப்படும் எச்சரிக்கையாகும்.

1992-களில் பெரும்பாலான மக்கள் அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பி பிழைப்பதற்கு இந்த நான்கு நிமிட எச்சரிக்கை தான் காரணம்.

அதுவே மூன்றாம் உலக உலகப்போர் நிகழ்ந்தால், அதில் அணு ஆயுத தாக்குதல்கள் நடந்தால் 1992-களில் கிடைத்தது போல நமக்கு நான்கு நிமிட எச்சரிக்கை கிடைக்க வாய்ப்பே இல்லை.

அதற்கு பதிலாக நமது தொலைப்பேசிகளில் மெசேஜ் வரலாம் என்று நம்பப் படுகிறது, அதாவது அணு ஆயுத தாக்குதலுக்கு முன்பு வரும் எச்சரிக்கை தகவல்.

சில நாட்டுகள் அணு ஆயுத தாக்குதல்களின் பேரழிவுகளில் இருந்து நாட்டு மக்கள் தப்பி பிழைத்துக் கொள்ள கடைசி நேர எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பும் தொழில்நுட்பத்தை சோதித்துள்ளன.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் உருவாக்கம் பெற்ற இந்த பாதுகாப்பு அமைப்பானது 2013-ஆம் ஆண்டு கிளாஸ்கோ மற்றும் யார்க்ஷயரில் சோதனை செய்யப்பட்டது.

உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளும்படியாக குறுந்தகவல் வந்தாலும், அந்த மிக குறுகிய நேரத்தில் ஒன்றும் செய்திட இயலாது என்பது தான் உண்மை. '

நான்கு நிமிடம் எச்சரிக்கை அமைப்பு இருந்த காலத்தில் கூட, அதிகபட்சம் மூன்று நிமிட நேரம் கிடைக்கும் ஆனால் அதையே மொபைல் எஸ்எம்எஸ் எதிர்பார்க்க முடியாது

அதிலும் குறிப்பாக நீங்கள் அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படும் இடத்தின் அருகாமையில் இருந்தால் நீங்கள் தப்பிக்கும் வாய்ப்பு அரியதாகி விடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

Next Story