கவர்ச்சியாக ஆடை அணிந்த நடிகைக்கு ஒரு வருடம் சினிமாவில் நடிக்க தடை


கவர்ச்சியாக ஆடை அணிந்த நடிகைக்கு ஒரு வருடம் சினிமாவில் நடிக்க தடை
x
தினத்தந்தி 28 April 2017 10:46 AM GMT (Updated: 2017-04-28T16:23:07+05:30)

கம்போடியா கவர்ச்சி நடிகை ஒருவருக்கு ஒரு வருடம் படங்களில் நடிக்க அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.


கம்போடியா நாட்டைச் சேர்ந்த நடிகை டேனி குவான். இவருக்கு வயது 24. இவரை சமீபத்தில் கம்போடியா நாட்டு கலாச்சாரம் மற்றும் கலைத்துறையை சேர்ந்த அமைச்சரகம் நேரில் அழைத்து பேசியுள்ளது.

அப்போது, அவர் வரிசையாக நிறைய படங்களில் கவர்ச்சியாக உடையணிந்து நடித்ததாகவும் ,மேலும் பேஸ்புக்கில் கவர்ச்சியாக பட்ம் வெளீயிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவருடைய கவர்ச்சி கம்போடியாவின் கலாச்சாரத்தையும், கலையையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதனால், அவரை ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து டேனி குவான் கூறும்போது:-

‘‘என்னைவிட மற்ற நடிகைகள் அனைவரும் எல்லையில்லா கவர்ச்சியில் நடித்து வருகிறார்கள். அவர்களை ஒப்பிடுகையில் நான் ஒன்றும் பெரிதாக கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை என்னுடைய தோற்றம் அவர்களுக்கு அந்த மாதிரியான எண்ணத்தை தூண்டியிருக்கலாம்.

எனக்கு எப்படி உடையணிய வேண்டும் என்பது தெரியும். ஆனால், என்னுடைய கலாச்சாரமும், கம்போடியா மக்களும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

Next Story