வட கொரிய சிக்கலை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கவும் - போப் பிரான்சிஸ்


வட கொரிய சிக்கலை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கவும் - போப் பிரான்சிஸ்
x
தினத்தந்தி 29 April 2017 9:58 PM GMT (Updated: 2017-04-30T04:00:36+05:30)

கெய்ரோவிலிருந்து தனது விமானத்தில் பயணம் செய்யும் போது போப் பிரான்சிஸ் வட கொரிய சிக்கலைத் தீர்க்க மூன்றாம் தரப்பு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றார்.

கெய்ரோ

விமானத்தில் பேட்டியளித்த அவர் அணு ஆயுதத்தால் ஏற்படக்கூடிய  பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மூன்றாம் தரப்பு நாடு ஒன்று குறிப்பாக நார்வே போன்றதொரு நாடு  மத்தயஸ்தப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழ்நிலை மிகவும் சூடாகி விட்டது, உலகம் ஒரு அழிவு தரும் அணு ஆயுத போர்ச்   சிக்கலை எதிர் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அப்படியொரு பரவலானப் போர் வரும் பட்சத்தில் மானுடத்தின் சிறப்பானதொரு பகுதி அழியக்கூடும் என்று அவர் கூறினார். 

அடுத்த மாதம் ஐரோப்பாவில் அதிபர் டிரம்பைச் சந்திக்கத் தான் தயார் என்றும் ஆனால் வாஷிங்டன் அப்படியொரு சந்திப்பினை கேட்டுள்ளதா என தனக்குத் தெரியாது என்று அவர் கூறினார். அமெரிக்கா தனது உலகளவிலான ராஜதந்திர வலிமையைப் பெற வேண்டும், ஏனெனில் அத்தன்மை மிகவும் நீர்த்துவிட்டிருக்கிறது என்று கூறினார் போப் பிரான்சிஸ்.


Next Story