அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி சுட்டுக்கொலை


அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 6 May 2017 9:11 AM GMT (Updated: 6 May 2017 9:11 AM GMT)

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த தம்பதியை சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வாஷிங்டன்,


மேற்கு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு உட்பட்ட லாரா வேல்லே லேன் பகுதியில் வசித்து வந்தவர், நரேன் பிரபு.  சிலிக்கான் வேல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தங்களது வீட்டுக்குள் புகுந்த ஒருவன் தனது தந்தையையும் தாயையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தனது தம்பியை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருப்பதாக நரேன் பிரபுவின் மூத்த மகன் சான் ஜோஸ் நகர போலீசாருக்கு அவசர தகவல் அளித்தான்.

உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிரடிப் படை போலீசார் அந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த கொலையாளியை கைது செய்வதற்காக முற்றுகையிட்டனர். போலீசாரை கண்ட கொலையாளி பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த 13 வயது சிறுவனை விடுவித்தான்.வீட்டைவிட்டு பத்திரமாக வெளியேவந்த சிறுவனை மீட்ட போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, நரேன் பிரபு, அவரது மனைவி மற்றும் கொலையாளி மூன்று பேரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.

நரேன் பிரபுவின் 20 வயது மூத்த மகன் அளித்த தகவலின்படி, அவரது சகோதரியை கொலையாளியான மிர்ஸா டாட்லிக்(24) உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளான். வேறு இடத்தில் தங்கியிருக்கும் அந்தப் பெண்ணும் மிர்ஸாவுடன் மிக நெருக்கமாக பழகிவிட்டு, கடந்த ஆண்டு அவனை வெறுத்து ஒதுக்கி விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மிர்ஸா டாட்லிக், இந்த படுகொலையை செய்துவிட்டு, தன்னத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்ததாக போலீசார் கருதுகின்றனர். 

Next Story