தான்சானியா நாட்டில் பேருந்து விபத்து: 29 பள்ளி குழந்தைகள் பலி


தான்சானியா நாட்டில் பேருந்து விபத்து:  29 பள்ளி குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 6 May 2017 4:05 PM GMT (Updated: 2017-05-06T21:35:03+05:30)

தான்சானியா நாட்டில் நடந்த பேருந்து விபத்தில் 29 பள்ளி குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

தோடோமா,

தான்சானியா நாட்டில் அரூஷா என்ற பகுதியில் அமைந்த பள்ளி கூடத்தில் இருந்து பள்ளி மாணவர்களை சுமந்து கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.

கரட்டு என்ற பகுதி அருகே வந்தபொழுது அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் பள்ளி குழந்தைகள் 29 பேர் பலியாகினர்.  அவர்களுடன் சேர்த்து மொத்தம் 34 பேர் விபத்தில் கொல்லப்பட்டனர்.  4 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த பேருந்து மரங்களுக்கு இடையே சிக்கி கொண்டுள்ள நிலையில் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.

Next Story