உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 8 May 2017 8:30 PM GMT (Updated: 2017-05-09T00:49:23+05:30)

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற இமானுவல் மேக்ரனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

* சோமாலியாவின் தென் பகுதியில் உள்ள லோயர் ஷெபில்லி பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அல்–‌ஷபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவப்படை அதிரடி தாக்குதலை தொடுத்தது. இதில் அல்–‌ஷபாப் இயக்கத்தின் பிராந்திய தலைவர் மோலின் உஸ்மான் அப்தி பாதில் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

* கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மாண்ட்ரீல் நகரில் கடந்த 2 நாட்களாக பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 48 மணி நேரத்துக்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

* மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் 712 கிலோ அளவிலான எறும்புதின்னி செதில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 2 மில்லியன் அமெரிக்க (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 கோடி) டாலருக்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக சுமார் 1,400 எறும்புதின்னிகள் வேட்டையாடப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

* பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற இமானுவல் மேக்ரனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் பிரான்சுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story