குல்பூஷண் யாதவ் எங்கள் தேசத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டு உள்ளார் பாகிஸ்தான் சொல்கிறது


குல்பூஷண் யாதவ் எங்கள் தேசத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டு உள்ளார் பாகிஸ்தான் சொல்கிறது
x
தினத்தந்தி 10 May 2017 9:56 AM GMT (Updated: 2017-05-10T15:26:11+05:30)

குல்பூஷன் யாதவ் எங்கள் தேசத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டு உள்ளார் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.


இஸ்லாமாபாத்,

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் கடந்த ஆண்டு கைது செய்தது. 

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்த நாட்டின் ராணுவ கோர்ட்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் 10–ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அவரை உயிரோடு மீட்டு இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானில் சாதகமான சூழ்நிலையானது காணப்படாத நிலையில் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. பாகிஸ்தான் நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனைக்கு தற்காலிக தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் குல்பூஷண் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பின் நகல் இந்தியா தரப்பில் கோரப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அளிக்கவில்லை. 

குல்பூஷண் ஜாதவ் எங்கிருக்கிறார், அவருடைய நிலை என்ன என்பது இதுவரையில் இந்தியாவிற்கு தெரியாது. 

இந்நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு இந்திய அரசு உதவிசெய்கிறது என்பதில் இருந்து திசைதிருப்பும் இந்தியாவின் முயற்சிதான் இது என பாகிஸ்தான் கூறிஉள்ளது.

“பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு அரசு உதவிசெய்கிறது என்பதை திசைதிருப்ப இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. எங்களுடைய நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதால் குல்புஷன் ஜாதவிற்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது,” என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா எம். ஆசிப் கூறிஉள்ளார். 

Next Story