ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு செல்லவிருந்த இந்திய தயாரிப்பு மத்திரைகளை இத்தாலி போலீஸ் பறிமுதல் செய்தது


ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு செல்லவிருந்த இந்திய தயாரிப்பு மத்திரைகளை இத்தாலி போலீஸ் பறிமுதல் செய்தது
x
தினத்தந்தி 10 May 2017 3:56 PM GMT (Updated: 10 May 2017 3:56 PM GMT)

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு செல்லவிருந்த இந்திய தயாரிப்பு வலி நிவாரணி மத்திரைகளை இத்தாலி போலீஸ் பறிமுதல் செய்து உள்ளது.


லண்டன்,


லிபியாவிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அங்கு சண்டையிடும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு இந்திய தயாரிப்பு வலி நிவாரணி மத்திரைகள் செல்லவிருந்தது தடுக்கப்பட்டு உள்ளது. சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 37 மில்லியன் டிராமொடல் மத்திரைகள் லிபியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் போரிடும் மிஸ்ராதா மற்றும் தோப்ரூக் பகுதிக்கு செல்லவிருந்தது, அதனை இத்தாலி போலீஸ் பறிமுதல் செய்து உள்ளது என இங்கிலாந்தை சேர்ந்த தி டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஜெனோவா துறைமுகத்தில் சுமார் மூன்று கண்டெய்னர்களில் இந்த மாத்திரைகள் அடைக்கப்பட்டும் லிபியா செல்லவிருந்து உள்ளது. மத்திரைகள், போர்வைகள் மற்றும் ஷாப்புகள் செல்கிறது என பொய்யாக குறிப்பிடப்பட்டு இருந்து உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பயங்கரவாதிகள் வலி இல்லாமல் உணர இதனை பயன்படுத்துகிறது எனவும் இத்தாலி விசாரணை அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிட்டு உள்ளது தி டைம்ஸ். 

சரக்கானது இந்தியாவில் இருந்து வந்து உள்ளது. இது பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி செய்யயும் நோக்கத்துடனோ, ஜிகாதி படைகளுக்கு உதவிசெய்யும் நோக்கத்துடனோ வந்திருக்கும் என இத்தாலி போலீசார் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது.

போகோ ஹாரம் பயங்கரவாத இயக்கம் நைஜிரியாவில் தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக பயங்கரவாதிகளுக்கு டிராமொடல் கொண்டு அடைக்கப்பட்ட மாத்திரைகளையே கொடுக்கிறது. இத்தாலி போலீஸ் விசாரணையில் இப்போது கைப்பற்றப்பட்டு உள்ள மாத்திரைகளானது இந்திய நிறுவனத்துடையது என தெரியவந்து உள்ளது எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாத்திரைகளானது துபாயில் உள்ள ஒரு ஏற்றுமதியாளருக்கு 250,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் இருந்து கப்பலில் புறப்பட்ட சரக்கானது இலங்கையில் மாயமாகி உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

லிபியாவில் இந்த மாத்திரைகள் இரண்டு டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது எனவும் இத்தாலி விசாரணை அதிகாரிகள் கூறிஉள்ளனர். 


Next Story